கொடுமையின் உச்சம்..!! பாலியல் புகாரளிக்க சென்ற 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்..!!
கொடுமையின் உச்சம்..!! பாலியல் புகாரளிக்க சென்ற 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்..!!
உத்தர பிரதேச மாநிலம் லலித்பூரில் 13 வயது சிறுமியை, நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதையடுத்து, புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்ற சிறுமியைகாவல் நிலைய பொறுப்பு அதிகாரியும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22-ந் தேதி சிறுமியை 4 பேரால் போபாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நான்கு நாட்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவளை மீண்டும் அவளது கிராமத்திற்கு அழைத்து வந்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
அதன்பின்னர் அந்த அதிகாரி சிறுமியை அவரது அத்தையிடம் ஒப்படைத்தார். வாக்குமூலத்தைப் பதிவு செய்ய, மறுநாள் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட சிறுமியை, அந்த அதிகாரி அவரது அத்தை முன்னிலையில் அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். எப்ஐஆரில் சிறுமியின் அத்தையும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி, ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி திலக்தாரி சரோஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட போலீசார் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலின்படி, “குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் நிலைய பொறுப்பு அதிகாரி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநில ஏடிஜி பிரசாந்த் குமார் கூறுகையில், ''டிஐஜி ஜோகேந்திர குமாருக்கு விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜான்சி சரக டிஐஜி ஜோகேந்திர குமார், இந்த சம்பவத்தை விசாரித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். வழக்கு முடியும் வரை லலித்பூரில் தங்கும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்'' என்று கூறினார்.