இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில், விலை வாசிகள் உயர்ந்து வருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் பொறுமை இழந்த மக்கள் அதிபர் மாளிகையை நோக்கி அணிவகுத்தனர். சிறிது நேரத்தில் அதிபர் மாளிகையின் பாதுகாப்பு அரண் உடைக்கப்பட்டு மாளிகையின் முன்பகுதி பொதுமக்கள் கட்டுப்பாட்டில் வந்தது.


இதைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ பாதுகாப்பில் தப்பி சென்றதாக தகவல் வெளியானது. அதிபர் மாளிகையில் இருந்து சொகுசு கார்கள் விமான நிலையம் நோக்கி சென்ற வீடியோ இணையத்தில் வெளியானது.

மேலும் இலங்கையில் இருந்து கிளம்பிய ராணுவ கப்பலில் சிலர் கடைசி நேரத்தில் ஏறியதாகவும், அது கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினராக இருக்கலாம் எனவும் தகவல் வெளியானது.

தற்போதைய நிலையில் அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

அதிபர் மளிகை முழுக்க போராட்டகாரர்கள் கைகளில் இருப்பதால் அங்கு படுக்கை அறை, உணவு அறை, பூங்கா, நீச்சல் குளம் என அனைத்து இடத்திலும் போராட்ட காரர்கள் வளம் வருகின்றனர்.

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் 'sir, வீட்டுல சின்ன பின் charger ஒன்னு இல்லையா? என்று கேட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in