எதிர்களை சிக்கவைக்க திட்டம்.. மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூரன் !
எதிர்களை சிக்கவைக்க திட்டம்.. மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூரன் !
உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள ஷஷ்வான் கிராமத்தில் இளைஞர் ஒருவர் தனது 22 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதேகிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் இடையே நீண்டகாலமாக பகை இருந்துள்ளது. அவர்களை எதிர்த்து எதுவும் செயல்படமுடியவில்லை என விரக்தியில் இருந்துள்ளார்.
இந்த நீண்ட யோசனைக்கு பிறகு, தன்னுடன் தகராறில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அதாவது, தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர் என போலீசில் புகார் அளித்தால் எதிர்கள் சிறைக்கு செல்வார்கள் என எண்ணியுள்ளார். இதற்காக தனது நண்பனை அழைத்த அந்த நபர் தனது திட்டத்தை கூறியுள்ளார்.
அதாவது, தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்யும்படி தனது நண்பனிடம் அந்த நபர் கூறியுள்ளார். இந்த பாலியல் வன்கொடுமையை தனது எதிரிகள் தான் செய்தனர் என போலீசில் கூறி அவர்களை சிறையில் தள்ளிவிடலாம் என திட்டமிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, திட்டமிட்டபடி அந்த நபர் தனது மனைவியை கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அங்கு வந்த அந்த நபரின் நண்பன் அவரின் மனைவியை கடத்திச்செல்வதுபோல் நடித்து அங்கு மறைவான இடத்தில் இரண்டுமுறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இதையடுத்து, தனது எதிரிகள் தான் தன் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர் என அந்த நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த பெண் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். தன் கணவர் தான் அவரது நண்பனை ஏவி இந்த செயலில் ஈடுபட்டதாகவும், அவரது நண்பர் தான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் போலீசில் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அப்பெண்ணின் கணவனையும், பாலியல் வன்கொடுமை செய்த அவரின் நண்பனையும் கைது செய்தனர். மனைவியை நண்பருக்கு கணவரே விருந்தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in