வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைந்தது..!!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைந்தது..!!;

Update: 2022-06-02 04:50 GMT

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

இந்த நிலையில், மே மாதம் 7-ம் தேதி திடீரென வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையை அதிரடியாக ரூ.50 அதிகரித்து அறிவித்தது. இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்தது. அப்போது, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.9.50 குறைக்கப்பட்டு, சென்னையில் ரூ.2,498.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே மே மாதம் 2வது முறையாக திடீரென வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 3 ரூபாயும், வணிக எரிவாயு சிலிண்டர் விலை 8.50 ரூபாயும் அதிகரிக்கப்பட்டது. இதனால் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1018.50, ஆக அதிகரித்தது. இதேபோல், வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் ரூ.2,498.50ல் இருந்து ரூ.8.50 அதிகரித்து ரூ.2,507-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேநேரத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.134 குறைந்து ரூ.2373-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News