ஒரு மாம்பலத்தின் விலை ரூ.2,000.. போட்டிப்போட்டு ஆர்டர் கொடுக்கும் மக்கள் !!
ஒரு மாம்பலத்தின் விலை ரூ.2,000.. போட்டிப்போட்டு ஆர்டர் கொடுக்கும் மக்கள் !!
மத்திய பிரதேசத்தில் விளையும் ‘நூா்ஜஹான்’ ரக மாம்பழம் ஒவ்வொன்றும் சுமாா் 4 கிலோ எடை கொண்டுள்ளதாகவும் அவை தலா ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
ஆப்கானிஸ்தானைச் சோ்ந்தது ‘நூா்ஜஹான்’ ரக மாமரங்கள். இந்த மரங்கள் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூா் மாவட்டம் கத்திவாடா பகுதியில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் வளர்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அவை நன்கு பூத்து தற்போது காய்க்க தொடங்கிவிட்டன. 3 நூா்ஜஹான் ரக மாமரங்களில் இந்த ஆண்டு சுமாா் 250 மாங்காய்கள் காய்த்துள்ளன.
இவை அனைத்தும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் பழுத்து விற்பனைக்குத் தயாராகிவிடும். ஒவ்வொரு மாம்பழமும் அதிகபட்சமாக 4 கிலோ வரை எடைகொண்டதாக இருக்கும்.
இதனை பராமரிக்கும் விவசாயி கூறுகையில், கடந்த ஆண்டு இதே மாம்பழத்தின் சராசரி எடை 3.80 கிலோ வரை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் காரணமாக நிறைய பூக்கள் சேதமடைந்து கீழே விழுந்துவிட்டன. நான் ஒவ்வொரு மாம்பழத்தையும் தலா ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளேன். கடந்த ஆண்டு ஒவ்வொரு பழமும் ரூ.500-ரூ.1,500 வரை விற்பனையாகின.
நூா்ஜஹான் ரக மாம்பழத்தை விரும்பி சாப்பிடுபவா்கள் இப்போதே எங்களை கைப்பேசியில் அழைத்து, முன்கூட்டியே ‘ஆா்டா்’ செய்யத் தொடங்கிவிட்டனா்.
newstm.in