சரிந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!
சரிந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து இந்தியாவில் தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் காணத் தொடங்கியது. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,680 ரூபாயாக இருந்தது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் நேற்று 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிலோவுக்கு 50 ரூபாய் குறைந்து 62 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளி 62 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.