இன்று முதல் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறை அமல் ..!

இன்று முதல் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறை அமல் ..!

Update: 2022-06-15 05:00 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 10 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும். இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும்.

பின்னர் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை ஒப்படைத்து,  10 ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்கு தொடர் முயற்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகத்தினர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

காலி மதுபாட்டில்களை சாலையோரங்களிலோ, விளை நிலங்களிலோ மற்றும் வனப்பகுதிகளிலோ வீசிச் செல்வதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News