முழு ஆட்டையும் விழுங்கிய மலைப்பாம்பு!!

முழு ஆட்டையும் விழுங்கிய மலைப்பாம்பு!!

Update: 2022-07-03 06:30 GMT

ஆம்பூரில் ஒரு முழு ஆட்டை மலைப்பாம்பு ஒன்று முழுவதுமாக விழுங்கிய சம்பவம் காண்பவர்களை அச்சமடையச் செய்தது.

ஆம்பூரை அடுத்த ஊட்டல் பைரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் உமா (55) என்பவர் 15க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் உமா தனது வெள்ளாடுகளை ஊட்டல் பைரப்பள்ளி காப்புகாட்டு பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார்.

அப்பொழுது காப்புக்காட்டில் புதர் பகுதியில் படுத்திருந்த மலைப்பாம்பு ஒன்று ஒரு வெள்ளாட்டை திடீரென கவ்விப் பிடித்தது. இதனை பார்த்த உமா, மலைப்பாம்பு மீது கற்களை வீசியுள்ளார்.

ஆனால் அது விடாமல் ஆட்டை இழுத்துச் சென்று முழுவதுமாக விழுங்கியது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த ஆம்பூர் வனத்துறையினர் மலைப்பாம்பை காப்புகாட்டிற்குள் விரட்டினர்.

ஒரு முழு ஆட்டை மலைப்பாம்பு முழுவதுமாக விழுங்கிய நிகழ்வு, ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News