திருடிவிட்டு வீட்டில் “ஐ லவ் யூ” என்று எழுதிவிட்டு சென்ற கொள்ளையன்!!
திருடிவிட்டு வீட்டில் “ஐ லவ் யூ” என்று எழுதிவிட்டு சென்ற கொள்ளையன்!!
கோவா மார்கோவ் பகுதியைச் சேர்ந்த ஆசிப் சேக் என்பவர் வேலைக்காரணமாக இரண்டு நாள்கள் வெளியூருக்கு சென்றார். பயணம் முடிந்து வீட்டுக்கு வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிப், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் திருடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, மார்கோவ் நகர் போலீஸாருக்கு ஆசிப் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கொள்ளை சம்பவம் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது வீட்டில் தடயம் கிடைக்குமா என்று தேடிய போது, வீட்டில் இருந்த தொலைக்காட்சியின் திரையில், 'I LOVE YOU' என எழுதிவைத்திருப்பதை பார்த்தனர்.
இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in