கத்திரி வெயில் தொடக்கம்.. 11 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம்
கத்திரி வெயில் தொடக்கம்.. 11 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம்
தமிழகத்தில் மார்ச் மாத இறுதியில் இருந்தே வெயில் தொடங்கியது. நாளுக்கு நாள் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றன. சாலைகளில் வீசும் அனல்காற்று வாகன ஓட்டிகள் மயக்கம் அடையச்செய்கிறது. இந்த நிலையில், இன்று (ஏப். 4) முதல் கத்திரி வெயில் காலம் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரத்தின் தொடங்க உள்ளது. இது 25 நாட்கள் நீடிக்கும்.
அப்போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது சூரியனின் வீரியம் அதிகரிக்கும். பூமி உஷணத்தைக் கிளப்பும் வேகமும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, கத்திரி வெயில் காலத்தில் தான் மிக அதிக வெப்பம் உணரப்படுவது வழக்கம். தற்போதே வெயில் தாக்கம் உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது கத்திரி வெயிலின் வீரியத்தையும் சகித்தாக வேண்டும். கத்திரி வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமாக காணப்படும் என்று தெரிகிறது.
சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே ஒருசில நகரங்களில் வெயிலின் அளவு உச்சத்தைத் தொட்டது. தமிழகத்தில் பரவலாக இயல்பை விட கூடுதலாக வெயில் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் அடுத்த இரண்டு நாட்களில் சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை தமிழகத்தில் இயல்பைவிட வெயில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இன்று முதல் கத்திரி வெயில் காலமும் தொடங்குவதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த கத்திரி வெயில் காலங்களில் 113 டிகிரி வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பகல் 11 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம். ஒருவேளை அவசியம் ஏற்பட்டால் குடிநீர், குடை, தொப்பி உள்ளிட்ட முன்னச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
பொதுமக்கள் வெயில் காலங்களில் அடிக்கடி தண்ணீர், நீர் மோர், இளநீர் உள்ளிட்ட நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், வளர்ப்பு பிராணிகளை நிழல் பகுதிகளில் பராமரிப்பது அவைகளுக்கு சிறந்தது.
newstm.in