சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் கடற்கரை பகுதியில் குற்றப்பிரிவு போலீசார் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, நேற்று இரவு வழக்கம் போல் 2 காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது நரிப்பையூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடற்கரை சாலையில் கும்பலாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களிடம் சென்று வீட்டில் மது அருந்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதை கேட்க மறுத்த இளைஞர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், குடிபோதையில் மறைத்து வைத்திருந்த அரிவாள், சைக்கிள் செயின் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு போலீசாரை தாக்கத் உள்ளனர். இதில், படுகாயமடைந்த போலீசார் வசந்த் மற்றும் லிங்கநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சாயல்குடி போலீசார் அல் ரசீது, முஹம்மது மசூத், பிலால், முபாரக் அலி, ஜகுபர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.