பைக்கில் படம் எடுத்த பாம்பு… அலறிய ஆசிரியர்!!

பைக்கில் படம் எடுத்த பாம்பு… அலறிய ஆசிரியர்!!

Update: 2022-05-20 21:30 GMT

திருப்பூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் மாட்டிக்கொண்ட 4 அடி நீள நல்ல பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

திருப்பூர் - வஞ்சிபாளையத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் துரையரசன் பள்ளி வளாகத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க முயற்சித்த போது வாகனத்தின் முன்புறத்தில் பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவிநாசியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர்கள் விஜய் மற்றும் கவுதம் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் இரு சக்கர வாகனத்தின் உள்ளே இருந்த சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை ஸ்க்ரூ டிரைவர் கொண்டு வெளியில் வரச் செய்தனர்.

ஸ்க்ரூ டிரைவர் மற்றும் பாம்பு கொக்கி கொண்டு பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர். ஆசிரியரின் இரு சக்கர வாகனத்தில் இருந்த நல்ல பாம்பால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

Similar News