அறையில் தூக்கில் தொங்கிய ராணுவ வீரர்.. யார் அந்த சிறுமி? - கடிதத்தில் பரபரப்பு தகவல்..
அறையில் தூக்கில் தொங்கிய ராணுவ வீரர்.. யார் அந்த சிறுமி? - கடிதத்தில் பரபரப்பு தகவல்..
ஹோட்டலில் தங்கியிருந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியிலுள்ள பகர்கஞ்ச் பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று உள்ளது. ராணுவ வீரர் ஒருவர் அந்த ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் காலை பணியாளர் சென்று பார்த்தப்போது ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த ராணுவ வீரர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹோட்டலில் தங்க வந்துள்ளார். அதன் பின் இன்று காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மேலும், உயிரிழந்த ராணுவ வீரரின் ஹோட்டல் அறையில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த கடிதத்தில், தனது இந்த விபரீத முடிவுக்கு காரணம் ஒன்றை எழுதிவைத்துள்ளார்.
தனது தற்கொலைக்கு சிறுமி ஒருவரை அவர் துன்புறுத்தியதே காரணம் என ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தற்கொலை கடிதம் கிடைத்ததை அடுத்து போலீசார் பல கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in