புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மரணம் !!

புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மரணம் !!

Update: 2022-03-12 12:58 GMT

மார்க்சிஸ்ட் புரட்சியாளரான சே குவேராவை துப்பாக்கி சுட்டுக் கொன்ற பொலிவியா ராணுவ வீரர் மரியோ டெரான் உயிரிழந்தார். 

மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சேகுவேரா. இளம் வயதில் இருந்தே சே குவேரா உலக நாடுகளில் நிலவும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தார். அர்ஜென்டினாவில் பிறந்த இவர், போர் காலத்தின்போது பொலிவியா நாடுகளில் அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்டு வந்தார். 

பொலிவியா காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக மறைந்திருந்த சேகுவேரா பட்டினியாலும், ஆஸ்துமா நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனைப் பயன்படுத்தி கியூப - அமெரிக்க சிஐஏ அதிகாரிகள் உதவியுடன் பொலிவிய ராணுவத்தினர் அக்டோபர் 8 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டு சே குவேராவைப் பிடித்தனர். பின்னர் பொலிவிய ராணுவ வீரர்களால் சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்டார். சமூகப் புரட்சியின் அடையாளமாக கருதப்படும் சேகுவேரா தனது 39 வயதில் கொல்லப்பட்டார்.


இந்த நிலையில் சேகுவேராவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவராக அறியப்படும், பொலிய ராணுவ வீரர் மரியோ டெரான் தற்போது உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 80.  இந்தச் செய்தியை அவரது உறவினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

சே குவேராவை கொன்ற நிகழ்வை மரியோ டெரான் ஒரு முறை பகிர்ந்திருந்தார். மரியோ அப்போது கூறுகையில், சேகுவேராவை சுட்டுக்கொல்ல முயன்றபோது அவரது ஒளி பொருந்திய கண்களை பார்த்து மிகவும் தடுமாறியதாகவும், அதற்கு சேகுவேரா, நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதட்டமின்றி செயல்படுங்கள், என ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து நான் அந்த அறையின் வாசல் பக்கம் சென்றேன். கண்களை மூடிக் கொண்டு சே வை நோக்கி துப்பாக்கியால் சுட்டேன், என்று தெரிவித்திருந்தார்.  

 

newstm.in

 

Similar News