பார்வையற்ற பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த போலீஸின் மகன்!!
பார்வையற்ற பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த போலீஸின் மகன்!!
பார்வை மாற்றுத்திறனாளியான இளம்பெண்ணை முன்னாள் போலீஸின் மகன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் சித்தூர் நகரின் கொண்டமிட்டா பகுதியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணின் தந்தை இறந்துவிட்டார். பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை தலைமைக் காவலரின் மகன் சின்னா என்கிற ஜெயச்சந்திரா ரெட்டி கேபிள் ஆபரேட்டராக பணிபுரிகிறார்.
ஜெயச்சந்திரா பார்வையற்ற பெண்ணை கடந்த ஓராண்டாக பாலியல் ரீதியில் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து நுழைந்த ஜெயச்சந்திரா பார்வைத் தெரியாத அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் திஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே தப்பியோடிய ஜெயச்சந்திரா ஜெட்டிங் கொட்டாய் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை காவல் துறையைச் சேர்ந்தவர் என்பதால், வழக்கை தவறாக வழிநடத்தும் வாய்ப்பு இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறினார். உயரதிகாரிகள் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in