துண்டு துண்டாக வெட்டிய தந்தையை புதைக்க இடம் வாங்கிய மகன்!!

துண்டு துண்டாக வெட்டிய தந்தையை புதைக்க இடம் வாங்கிய மகன்!!

Update: 2022-05-21 07:00 GMT

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த காஞ்சனா என்பவர் தனது 80 வயது தந்தை குமரேசனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆற்காடு சாலையில் உள்ள குமரேசனின் வீட்டுக்கு சென்று பார்த்த போது, வீடு முழுக்க ரத்த கறை படிந்து கிடந்தது.

ஆனால், குமரேசனை காணவில்லை. போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது குமரேசனின் மகனான குணசேகரன் மீது சந்தேகம் பார்வை விழுந்தது. அவரை பிடித்து விசாரித்தால் உண்மை வெளிவரும் என நினைத்த போது அவர் தலைமறைவானது தெரியவந்தது.

சொத்துக்காக தனது தந்தையை கொலை செய்த குணசேகரன் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ராணிப்பேட்டை அடுத்த காவேரிப்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான நிலத்தில் புதைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

காவேரிப்பாக்கத்திற்கு புறப்பட்டுச் சென்ற போலீசார் குமரேசனின் உடல், புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்தனர். உடல் துண்டு துண்டாக உடலை வெட்டி கொடூரமாக கொன்று புதைக்கப்பட்டிருந்தது. பின்னர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சொத்துக்காக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்தனர். இதற்கு நடுவே முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் குணசேகரனை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.

newstm.in

Similar News