தந்தையை உயிருடன் தீவைத்து எரித்த மகன்.. பாசம் முக்கியம் அல்ல பணம் தான் !!
தந்தையை உயிருடன் தீவைத்து எரித்த மகன்.. பாசம் முக்கியம் அல்ல பணம் தான் !!
சொத்து தகராறு காரணமாக தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற மகனின் கொடூர செயலால் பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் விவசாயி முத்துவேல் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தகுமார்(36), முரளிதரன்(31) என இரு மகன்கள் உள்ளனர். சாந்தகுமார் சென்னையில் வசித்து வருகிறார். முரளிதரன் திருமணம் ஆன நிலையில் வெள்ளாளப்பட்டி கிராமத்திலேயே தனது தன் மனைவியுடன் வசித்து வருகிறார். அவர்களுடன் தந்தை முத்துவேலுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து மூத்த மகன் சாந்தகுமார் தந்தையை பார்க்க வெள்ளாளப்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தந்தை முத்துவேலிடம் தகராறு செய்துள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உண்டானதாக கூறப்படுகிறது.
அப்போது கையில் தயாராக வைத்திருந்த பெட்ரோலை தந்தை முத்துவேல் மீது ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார். உடலில் தீ பற்றிய நிலையில் முத்துவேல் வலியால் அலறி துடித்து உள்ளார். முத்துவேல் சத்தம்போட்டதை கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, முத்துவேல் அளித்த புகாரின்பேரில் ஜெகநாதபுரம் போலீசார் மகன் சாந்தகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .
newstm.in