தந்தையின் நெஞ்சில் ஸ்க்ரூ டிரைவரை இறக்கிய மகன்.. பின்னர் நடந்த விபரீதம் !!
தந்தையின் நெஞ்சில் ஸ்க்ரூ டிரைவரை இறக்கிய மகன்.. பின்னர் நடந்த விபரீதம் !!
போதையில் தந்தையை மகனே கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், ஆலப்புழா பகுதியில் தங்கராஜ் (65) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சஜீவ் (38). சஜீவ் மதுபோதைக்கு அடிமையானவர் என்றும் அடிக்கடி மதுபோதையில் வீட்டுசென்று தகராறு செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தந்தை தங்கராஜ் மற்றும் மகன் சஜீவ் இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கமாக இருந்துள்ளது.
வழக்கம்போல நேற்று மாலை குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகன் சஜீவ் தந்தை தங்கராஜுடன் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சஜீவ் வீட்டில் கிடந்த ஸ்க்ரூ டிரைவரை எடுத்து தங்கராஜ் நெஞ்சில் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் விழுந்த தங்கராஜை சஜீவ் பின்னால் பிடித்து தள்ளியதில் அவர் நிலை குலைந்து தலை பின் வாசல் சுவரில் மோதி கீழே விழுந்தார்.
பின்னர் தலைகுப்புற விழுந்த தங்ககராஜின் பின் தலையில் மீண்டும் மகன் சஜீவ் அதே ஸ்க்ரூ டிரைவரை எடுத்து வந்து குத்தியதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து தங்கராஜ் பலியானார். சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தந்த புகாரின் பேரில் விரைந்த போலீசார் இறந்த தங்கராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் தந்தையை குத்திக் கொலை செய்த மகன் சஜீவை கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதையில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in