பெற்றோரை கொன்ற மகன்… போலீஸிடம் சொல்லிவிட்டு எஸ்கேப்!!

பெற்றோரை கொன்ற மகன்… போலீஸிடம் சொல்லிவிட்டு எஸ்கேப்!!

Update: 2022-04-10 19:01 GMT

கேரளா மாநிலம் திருச்சூர் வெள்ளிகுளங்கர இஞ்சக்குண்டு பகுதியில் பெற்றோரை கொலை செய்துவிட்டு தப்பிய மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சூரில் உள்ள வெள்ளிகுளங்கரஇஞ்சக்குண்டு என்ற இடத்தில் குட்டன், சந்திரிகா தம்பதி கொலை செய்யப்பட்டுள்ளனர். பெற்றோரிடம் மகன் அனீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒருகட்டத்தில், அனீஷ் இருவரையும் மண் வெட்டி யால் சரமாரியாக தாக்கிய போது இருவரும் தப்பி ஓட முயன்றனர். அப்போது வீட்டில் இருந்த அரிவாளுடன் ஓடிய அனீஷ், இருவரையும் சரமாரியாக வெட்டினார்.

இதில் குட்டனும் ( 60 ) , சந்திரிகாவும் ( 55 ) கழுத்தில் ஆழமாக வெட்டுப்பட்டு  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கொலை குறித்து அனீஷ் போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார்.

போலீசார் வருவதற்குள் அனீஷ் ( 30 ,)  அங்கிருந்து பைக்கில் தப்பித்து சென்றுவிட்டார்அனீஷ்க்கும் அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு, வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம் என  அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும் குற்றவாளியை பிடிக்க  நடவடிக்கையை  தீவிரப்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Similar News