கள்ளக்காதலியுடன் தந்தை இருந்ததை வீடியோ எடுத்த மகன்.. பின்னர் நடந்த விபரீதம் !!

கள்ளக்காதலியுடன் தந்தை இருந்ததை வீடியோ எடுத்த மகன்.. பின்னர் நடந்த விபரீதம் !!

Update: 2022-05-24 18:07 GMT

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் ஆரோக்கிய சகாயராஜ். இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகன் ஆனஸ்ட்ராஜ்(27). லாரி உரிமையாளரான ஆரோக்கிய சகாயராஜ் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து விராலிமலை காமராஜர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அங்கு அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவது வீட்டுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து தேன்மொழி, தனது கணவரை மீட்டு தருமாறு போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி போலீசார் ஆரோக்கிய சகாயராஜிடம் விசாரணை நடத்தினர். இதில் தேன்மொழியை விவாகரத்து செய்ய இருப்பதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

இதையடுத்து தனது தந்தை, அந்த பெண்ணுடன் சேர்ந்து இருப்பதை வீடியோவில் பதிவு செய்து போலீசாரிடம் அளிக்க மகன் ஆனஸ்ட்ராஜ் முடிவு செய்தார். அப்போதாவது அப்பெண்ணை பிரிந்து தந்தை வந்துவிடுவார் என அவர் எண்ணியுள்ளார். இதற்காக விராலிமலைக்கு சென்று தந்தை பெண்ணுடன் இருக்கும்போது, வீடியோ எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு உதவிக்காக நண்பர்கள் குரு, கந்தன் ஆகியோரும் சென்றுள்ளனர்.

நேற்றிரவு அவர்கள் வீடியோ எடுக்க முயன்றபோது பார்த்துவிட்ட அவரது தந்தை, மகனை திட்டினார். இதில் தந்தை, மகனிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உண்டானது. இந்த சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ஆனஸ்ட்ராஜ் உள்ளிட்ட 3 பேரையும் திருடர்கள் என நினைத்து தர்ம அடி கொடுத்தனர். இதில் ஆனஸ்ட்ராஜ், கந்தன் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த விராலிமலை போலீசார் காயமடைந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தந்தை, மகன் தனித்தனியே அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

newstm.in
 

Similar News