இளைஞரை இணைபிரியாத அணில்.. வியக்கவைக்கும் காதல் !!

இளைஞரை இணைபிரியாத அணில்.. வியக்கவைக்கும் காதல் !!

Update: 2022-02-14 18:49 GMT

மதுரையில் இளைஞரை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவருடனே வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் ஒன்றாக வசித்து வியப்பை ஏற்படுத்தி வருகிறது அன்பு நிறைந்த அணில் ஒன்று. 

மதுரை நேரு நகரைச் சேர்ந்தவர் வினோத். இளைஞர் வினோத் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெக்கானிக் நிறுவனத்திற்குள் அணில் ஒன்று புகுந்துள்ளது. சிறிது நேரம் அந்த அணில் அங்கும் இங்குமா ஓடிக்கொண்டிருந்த நிலையில், அங்கிருந்து வெளியேறாமல் சுற்றிச் சுற்றி வந்துள்ளது.
 


இந்நிலையில், அதற்கு தானியங்கள் கொடுத்து அரவணைத்தார் இளைஞர் வினோத். அதேபோல், அந்த அணிலும் அவரிடம் நெருக்கம் காட்டி பழகியது. இதன்பின்னர் அணில் அவருடனே இருக்கத் துவங்கியது. இதனால் வினோத் வீட்டிற்கு செல்லும்போதும், அவர் வேலைக்குச் செல்லும்போதும் அவரது தோளிலும் சட்டை பாக்கெட்டிலும் அமர்ந்து பிரியாமல் இருந்து வருகிறது.
 
இதையடுத்து அணிலின் அன்பை புரிந்து கொண்ட இளைஞர் அணிலிற்கு உணவு தண்ணீருடன் அன்பையும் செலுத்தி வளர்த்து வருகிறார். இளைஞர் அணிலிடையே உள்ள அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


newstm.in


 

Similar News