திமுக இந்த தேர்தலில் வென்றதற்கு பணபலம், அதிகார பலம் தான் காரணம் - செல்லூர் ராஜூ.!!

திமுக இந்த தேர்தலில் வென்றதற்கு பணபலம், அதிகார பலம் தான் காரணம் - செல்லூர் ராஜூ.!!

Update: 2022-02-25 04:30 GMT

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,

அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம் என்றும் அதிமுக வாக்கு வங்கி குறையவில்லை, வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வரவில்லை என்றார்.

மேலும் திமுக ஆட்சி மீது உள்ள விரக்தியில் மக்கள் முழுமையாக வாக்களிக்கவில்லை என கூறிய அவர், அதிமுக திமுகவில் இணைந்துவிடும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜக 3வது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்வதற்கு காரணம் அது எப்போதும் வளரும் கட்சி தான், அவர்கள் அப்படி தான் சொல்வார்கள் என கூறிய அவர், தமிழ்நாட்டில் என்றுமே திமுக, அதிமுக தான் ஆட்சி செய்யும். மாற்று கட்சியினர் யாராலும் ஆள முடியாது என தெரிவித்தார்.

Similar News