வலிமை படத்தை உலகின் மிகப்பெரிய தியேட்டரில் பார்க்க உள்ள வாரிசு நடிகை!!
வலிமை படத்தை உலகின் மிகப்பெரிய தியேட்டரில் பார்க்க உள்ள வாரிசு நடிகை!!
வலிமை படத்தை அந்தப்படத்தின் தயாரிப்பாளரின் மகளான ஜான்வி கபூர் உலகின் மிகப்பெரிய தியேட்டரில் பார்க்க உள்ளார்.
வலிமை திரைப்படம் வரும் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு 100 சதவீத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவிலும் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். வரும் 24ஆம் தேதி ஸ்பெஷல் காட்சியாக காலை 4 மணிக்கு வலிமை திரைப்படம் ஸ்க்ரீன் செய்யப்படவுள்ளது. இதற்கான புக்கிங்ஸ் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல நடிகையும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளுமான ஜான்வி கபூர் வலிமை படத்தை உலகின் மிகப்பெரிய தியேட்டரில் பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் வலிமை திரைப்படத்தை காண உள்ளார்.
இதுதொடர்பாக ஜான்வி கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டோரியில் விரைவில் ஃபிரான்ஸில் அஜித் ரசிகர்களை சந்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இப்படம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in