போதை தலைக்கேறியதால் போலீசாரிடம் வசமாக சிக்கிய திருடன்..!!

போதை தலைக்கேறியதால் போலீசாரிடம் வசமாக சிக்கிய திருடன்..!!

Update: 2022-07-21 04:45 GMT

இந்தியாவில் திருட்டு சம்பவங்கள் அங்காங்கே நடந்து கொன்றே தான் இருக்கிறது. இந்த திருட்டு சம்பவம் சென்னையிலும் குறைந்த பாடில்லை. தனியாக இருக்கும் வயதான பெண்களிடம் தங்கள் கைவரிசையை காட்டுவது,ரோட்டில் தனியாக நடந்து செல்பவர்களிடம் நகைகளை பறித்து செல்வது, கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டுவது என திட்டம் போட்டு கைவரிசை காட்டும் திருடர்கள் எப்படியோ போலீசிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

இதுபோன்ற ஒரு திருட்டு சம்பவம் தான் சென்னை மேடவாக்கத்தில் நடந்துள்ளது.சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் அப்பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த பொருட்கள் திருடுபோயுள்ளது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பன்னீர் செல்வம் மேடவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில், மேடவாக்கம் மேம்பாலத்தில் உதிரி பாகங்களுடன் தூங்கி கொண்டிருந்த நபரிடம் போலீசார் விசாரணை செய்தபோது , அவர் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போதை ஆசாமி ஆசிக்கை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Similar News