‘கலகலப்பு’ பட பாணியில் ஜன்னல் ஓட்டையில் சிக்கிய திருடன்..!
‘கலகலப்பு’ பட பாணியில் ஜன்னல் ஓட்டையில் சிக்கிய திருடன்..!
ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் ஜாடுபுடியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் எல்லையம்மன். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் விமரிசையாக திருவிழா நடைபெறும். இது போன்று உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுட திருவிழா கடந்த மாதம் கோலாகலமாக நடந்தது முடிந்தது. அப்போது பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர்.
இதனை அறிந்து கொள்ளையன் இரவு கோவிலுக்கு வந்து கோவிலில் ஜன்னல் கம்பிகளை நீக்கிவிட்டு கோவிலுக்குள் சென்று உள்ளார்.
பின்னர், கருவறையில் இருந்த அம்மன் தங்க வெள்ளி நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு ஜன்னல் வழியோ வெளியே வர முயற்சித்து உள்ளார். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. நீண்ட நேரம் வெளியே வர போராடியதால் கலைப்பு ஏற்பட்டு அப்படியே தூங்கி உள்ளார்
இந்நிலையில் காலை பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஜன்னலில் சிக்கி இருந்த திருடனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஜன்னலில் சிக்கியிருந்த கொள்ளையனை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசாருக்கு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜன்னலில் சிக்கியிருந்த திருடனை மீட்டனர். தற்போது அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
A burglar trapped in the act at Jhadupudi Jami Yellamma #Temple in Kanchili mandal of Srikakulam dist. Enters through a small ventilation window, but just couldn't get out.#AndhraPradesh #Kanchili #Jhadupudi #Srikakulam #Burglar #Funny #JamiYellammaTemple pic.twitter.com/XF6SGG9LYI
— Surya Reddy (@jsuryareddy) April 5, 2022