திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியது! மணமகன் படுகாயம்!!

திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியது! மணமகன் படுகாயம்!!

Update: 2022-05-18 20:10 GMT

திருமணப் பரிசாக வந்த பொம்மையை ரீசார்ஜ் செய்ய முயன்றபோது வெடித்து சிதறியதில் மணமகன் மற்றும் மணமகளின் உறவினர் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

குஜராத்தின் நவ்சாரி மாவட்டம் மின்தாபரி கிராமத்தில் லதேஷ் காவித் என்பவருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியினர் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பரிசுகளைப் பெற்றனர்.

லதேஷ் மற்றும் மணமகளின் உறவினர் ஜியான் ஆகியோர் தங்கள் வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் பரிசுப் பொருட்களைப் பிரித்தபோது, பார்சல் ஒன்றில் ரீசார்ஜ் செய்யக்கூடிய பொம்மை இருப்பதைக் கண்டனர்.

இதையடுத்து லதேஷ் மற்றும் ஜியான் அந்த பொம்மையை ரீசார்ஜ் செய்ய முயன்றனர். அப்போது திடீரென அந்த பொம்மை வெடித்து சிதறியதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

மணமகன் லதேஷின் கைகள், தலை மற்றும் கண்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரது வலது மணிக்கட்டு கையிலிருந்து துண்டிக்கப்பட்டது, அதே நேரத்தில் ஜியானின் தலை மற்றும் கண்களில் காயங்கள் ஏற்பட்டது.

இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வெடித்து சிதறிய பரிசு மணப்பெண்ணின் மூத்த சகோதரியின் முன்னாள் காதலனால் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறதுஇதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News