ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை காவு வாங்கிய புதையல் ஆசை!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை காவு வாங்கிய புதையல் ஆசை!!

Update: 2022-06-30 07:00 GMT

மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் புதையல் ஆசையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டிய வீட்டில் இருந்து 9 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், கடன்தொல்லை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் விசாரணையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

மந்திரவாதியான தீரஜ் சந்திரகாந்த் (39) மற்றும் அவரது டிரைவர் அப்பாஸ் முகமது அலி பகவான் (48) ஆகிய இருவரையும் கைது செய்து போலீஸார் விசாரித்தனர். அதில் அப்பாஸ், இறந்த குடும்பத்தினரிடம் வீட்டில் புதையல் இருப்பதாக கூறி, ரூ.1 கோடி வாங்கியுள்ளார்.

ஆனால் புதையலை கண்டுபிடித்து தராததால் வாங்கிய பணத்தை குடும்பத்தினர் திரும்ப கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பாஸ் முகமது அலி பகவான் கடந்த ஜூன் 19 ஆம் தேதி புதையலைக் கண்டுபிடிக்க சில சடங்குகளைச் செய்ய வேண்டும் என கூறினர்.

அப்போது ஒவ்வொருவராக மாடிக்கு வரவழைத்து விஷம் கலந்த தேநீரை கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News