இன்று வருகிறது பொன்னியின் செல்வன் படத்தின் வீடியோ !!
இன்று வருகிறது பொன்னியின் செல்வன் படத்தின் வீடியோ !!;
இயக்குனர் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை பல வருட போராட்டங்களுக்கு பின் ஒருவழியாக எடுத்து முடித்துள்ளார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர். இவர்களது கேரக்டர் அடங்கிய போஸ்டர்கள் மற்றும் இப்படத்தின் டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.
இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், உடல் நலக்குறைவு காரணமாக கலந்து கொள்ளவில்லை. தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக விக்ரம் தனது ரசிகர்களுக்கு வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விக்ரமின் ரசிகர்களுக்காக அவரது கதாபாத்திரம் தொடர்பான புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று பொன்னியின் செல்வன் படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று வெளியாகும் அப்டேட் ரசிகர்களுக்கு மேலும் அதிகப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in