கணவரை குத்து விளக்கால் அடித்துக் கொன்ற மனைவி!!
கணவரை குத்து விளக்கால் அடித்துக் கொன்ற மனைவி!!
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே கணவரை மற்றும் குத்துவிளக்கால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவத்தையாபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி பொன்ராஜ் (43) - சந்திரமதி (35) தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சந்திரமதி கடந்த ஓராண்டாக சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார்.
இந்நிலையில் சந்திரமதி வீட்டில் இருந்த பித்தளை குத்துவிளக்கை எடுத்து கணவர் பொன்ராஜின் தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த பொன்ராஜ் அலறி துடித்தவாறு வீட்டில் இருந்து வெளியே தெருவில் ஓடினார்.
அவரை விரட்டிச் சென்ற சந்திரமதி குத்துவிளக்கால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த பொன்ராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். இதனைப் பார்த்த குழந்தைகள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
அக்கம்பக்கத்தினர் பொன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பொன்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த போலீஸார் சந்திரமதியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in