கணவனைக் கொன்று கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்த மனைவி!!

கணவனைக் கொன்று கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்த மனைவி!!

Update: 2022-07-21 19:13 GMT

மும்பை அருகே சாக்கி நாக்காபகுதியை சேர்ந்த நசீம் கான் (22) என்பவருக்கும் ரூபினா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும், தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நசீம் கானின் தந்தை, நசீமை காண வந்துள்ளார். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததால், பக்கத்து வீட்டில் குறித்து விசாரித்துள்ளார். ஆனால் அவர்களுக்கு எந்த விவரமும் தெரியவில்லை.

அவர் திரும்பிச் சென்றுவிட்டார். சில நாட்களுக்கு பிறகு, நசீம் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அவரது பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை போலீஸார் சோதனை செய்ததில், நசீம் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அவரது மனைவி ரூபினாவை தொடர்புக்கொள்ள முயற்சித்தனர். தொடர்பு கொள்ள முடியாததால், ரூபினாவின் மொபைலின் கடைசி டவர் இருப்பிடத்தை தெரிந்துகொண்டு அங்கே சென்று விசாரித்தனர்.

விசாரணையில், கணவன் மனைவிக்குள் வரும் வழக்கமான சண்டை இவர்களுக்குள்ளும் வந்தது. சம்பவம் நடந்த நாளான 14ஆம் தேதியும் வழக்கம் போல் சண்டை வந்துள்ளது. இரவு தொடங்கிய இந்த சண்டை மறுநாள் காலை வரை தொடர்ந்தது.

நசீமை சமாதானப்படுத்துவதற்காக, ரூபினா அவரது ஆண் நண்பரான சைஃப் பரூக் (21) என்பவரை அழைத்துள்ளார். நசீமை, சைஃப் பரூக், சமாதானபடுத்த முயற்சித்த போது சண்டை வீரியமானதால் கோபமடைந்த சைஃப் பரூக், நசீமின் தலையில் தாக்கியுள்ளார்.

அதில் மயக்கமடைந்த நசீமை சைஃப் பரூக் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து நசீமின் உடலை, அங்கிருந்த படுக்கை அறையிலுள்ள கட்டிலின் கீழ் பதுக்கி வைத்து விட்டு இருவரும் தலைமறைவாகியுள்ளதாக கூறினர். இருவரையும் கைதுசெய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News