ஆந்திராவில் பெண் ஒருவர் அரசு பேருந்தை வழிமறித்து அதன் ஓட்டுநரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடா அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் முசலைய்யா, ஆந்திரா மருத்துவமனை சாலையில் பேருந்தினை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது போக்குவரத்து விதியை மீறி, பெண் ஒருவர் தவறாக அந்த வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அந்த பெண் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது, முசலைய்யா ஓட்டிச் சென்ற அரசு பேருந்து லேசாக உரசியது. இதனால் ஆத்திரம் அடைந்து சாலையின் நடுவே, பேருந்தைவழி மறித்த பெண், ஓட்டுநரை, வசை பாடியுள்ளார்.
மேலும் பேருந்துக்குள் ஏறிச் சென்று ஓட்டுனரின் சட்டையை பிடித்து இழுத்து, தாக்கினார். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார், அந்த பெண்ணிடம் பேசி சமாதானம் செய்தனர். அதன் பின்னர், ஓட்டுனர் அளித்த புகாரின் பெயரில், பெண் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், அந்த பெண் விஜயவாடா வித்யாரண்யர் புரத்தை சேர்ந்த நந்தினி என்பது தெரிய வந்தது. மேலும், அவரிடம் தொடர்ந்து, போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
newstm.in