மதுவில் விஷம் கலந்து குடித்த பெண், கள்ளக்காதலன் உயிரிழப்பு !!

மதுவில் விஷம் கலந்து குடித்த பெண், கள்ளக்காதலன் உயிரிழப்பு !!

Update: 2022-03-15 18:15 GMT

கள்ளக்காதல் காரணமாக மதுவில் விஷம் கலந்துகுடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் பாரப்பட்டி கிராமத்தில் மணிகண்டன் - ராமலட்சுமி (32) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், சிவகாசி அருகே மேலப்பாளையாபுரத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவருக்கும் ராமலட்சுமிக்கும் இடையே அறிமுகம் உண்டானது. பின்னர் நெருங்கிய பழகிய இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுளுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளனர்.

எனினும் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். மேலும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இரண்டு குடுபத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ராமலட்சுமியும் பன்னீர் செல்வமும் மேலப்பாளையபுரம் காட்டு பகுதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இருவரும் இரவில் தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிகிறது. அதிகாலையில் அப்பகுதிக்கு சென்ற மக்கள் இறந்து கிடந்த இருவரையும் பார்த்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாரனேரி போலீசார், இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மாரனேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் உறவு காரணமாக இருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Similar News