பெண் ஒருவர் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பரபரப்பான சாலையில் டெலிவரி செய்ய பைக்கில் சென்றுள்ளார். அப்போது சாலையில் அவரது பைக் தனது ஸ்கூட்டி மீது மோதியதால் காயமடைந்ததாகவும், அதனால் அவரை தாக்கியதாகவும் கூறி உள்ளார்.

உணவு டெலிவரி நிறுவன ஊழியரை பெண் ஒருவர் தன் காலில் உள்ள செருப்பைக் கழட்டி அடிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சுற்றி நிற்கும் பொதுமக்கள் நிறுத்தச் சொன்னாலும் அந்த பெண் தொடர்ந்து அந்த நபரை அடித்துள்ளார். ஒரு கட்டத்தில், அந்த பெண் அவரை எட்டி உதைத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண் ஸ்கூட்டியில் செல்லும்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.  பைக் ஓட்டி வந்த டெலிவரி ஊழியர் சாலையின் தவறான பக்கத்தில் சென்றதாக ஒரு சிலர் சுட்டிக்காட்டினர்.

தவறான பாதையில் டெலிவரி ஏஜெண்ட் வந்தது தவறு என்பதை ஏற்றுக்கொண்ட பலர், அந்த பெண் சூழ்நிலையை கையாண்ட விதத்தை கண்டித்துள்ளனர். அவர் அவமதிக்கப்பட்ட விதத்தை நியாயப்படுத்த முடியாது என்றும், அந்தப் பெண் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிலர் கூறி உள்ளனர். 

newstm.in


 

Tags: