13 பற்களை தன் கையாலேயே பிடுங்கி எறிந்த பெண்மணி!!
13 பற்களை தன் கையாலேயே பிடுங்கி எறிந்த பெண்மணி!!
இங்கிலாந்தின் சஃபோல்க் என்கிற நகரில் வசிக்கும் பெண்மணி ஒருவர், தனது 13 பற்களை தனது கைகளால் பிடிங்கி உள்ளார்.
இந்த பெண்மணி நாள்பட்ட ஈறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பல் மருத்துவரிடம் சிகிச்சை பெற விரும்பினார். ஆனால் அவர் வீட்டிற்கு அருகே பல் மருத்துவர் யாரும் இல்லை. அத்துடன் குறைந்த செலவில் பல் மருத்துவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே அதிக வலி காரணமாக தனது பற்களை கைகளால் பிடுங்க முடிவு செய்தார். தன்னுடைய பற்கள் இந்த பாதிப்பினால் ஏற்கனவே வெளியே நீட்டி கொண்டு இருப்பதால், மற்றவர்கள் முன் சிரிப்பதற்கு கூட முடியாமல் அவஸ்தைப்பட்டார்.
அவரது வீட்டிற்கு அருகில் இருந்த பல் மருத்துவமனை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. எனவே அப்பகுதி மக்கள் எந்த வகையான பல் பிரச்னையாக இருந்தாலும் நீண்ட தூரம் செல்ல வேண்டிய உள்ள நிலை இருக்கிறது.
அங்கு இருந்த கிளினிக்குகளும் செலவு அதிகம் வைக்கக்கூடியவையாக இருந்தன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு டேனியல் பாதிக்கப்பட்ட தனது 13 பற்களையும் அவரே பிடுங்கி விட்டார்.
அவருக்கு ஈறுகளில் வீக்கம் ஏற்பட கூடிய பிரச்னை இருந்து வந்தது. பின்னர் அது தொற்றுநோயாக மாறியது. இப்போது, அவருடைய ஈறுகள் மிகவும் மோசமாகிவிட்டன. எனவே தான் 13 பற்களை பிடுங்கி விட்டார். இதன் பிறகும், இன்னும் ஒன்பது பற்கள் விழாமல் அசைந்து கொண்டே இருப்பது மேலும் கொடுமையான விஷயம் என்று அப்பெண் கூறுகிறார்.
newstm.in