உலகிலேயே முதல்முறையாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட அமெரிக்கர் திடீர் மரணம்..!!

உலகிலேயே முதல்முறையாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட அமெரிக்கர் திடீர் மரணம்..!!

Update: 2022-03-11 04:00 GMT

அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

செயற்கை சுவாசக் கருவிகளுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பென்னட்டுக்குப் பன்றியின் இதயத்தை மருத்துவர் கிரிஃபித் பொருத்தினார். மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், பன்றியின் இதயம் பொருத்திய 2 மாதங்களில் டேவிட் பென்னட் காலமானார். அவரது மரணத்துக்கான காரணத்தை மருத்துவர்கள் தெரிவிக்கல்லை.  கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவரது உடல் நிலை மோசம் அடைந்தது என்பதை மட்டும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News