வீட்டுக்கு வந்த உறவினரை கொடூரமாக கொலை செய்த இளைஞர் !!

வீட்டுக்கு வந்த உறவினரை கொடூரமாக கொலை செய்த இளைஞர் !!

Update: 2022-07-03 19:30 GMT

உத்தர பிரதேச மாநிலம் அமேதியை சேர்ந்தவர் பங்கஜ் சுக்லா (35). இவர் நேற்று (ஜூலை 2) அயோத்யாவின் புஹாபுர் பகுதியில் உள்ள தாய்வழி தாத்தாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அங்கு பங்கஜ் சுக்லாவும், உறவினர் கோலு ஷர்மாவும் இணைந்து நேற்று இரவு மது குடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் முற்றி ஒருகட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரையும் உறவினர்கள் பிரித்து வெவ்வேறு இடத்துக்கு அனுப்பினர். எனினும் இதனை அவமானமாக கருதிய கோலு ஷர்மா அவரை தாக்குவதற்கு திட்டம்போட்டார்.

இதனால் வீட்டில் இருந்த பயங்கரமான ஆயுதத்தை எடுத்துக்கொண்டு, கோவில் அருகே இருந்த பங்கஜ் சுக்லாவை தாக்குவதற்கு சென்றிருக்கிறார். ஆனால், கடும் கோவத்தில் அங்கு அவரது கழுத்தை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியோடினார்.

மறுநாள் காலை கோவில் அருகே ரத்த வெள்ளத்தில் சடலம் கிடப்பதை கண்ட மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான தகவலை அடுத்து போலீசார் விரைந்து சென்று பங்கஜ் சுக்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது பங்கஜ் சுக்லா கொடூரமாக கொலை செய்தது உறவினர் கோலு ஷர்மாவும் தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் அருகே தலை துண்டித்து ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
newstm.in
 

Tags:    

Similar News