கழுத்தை அறுத்துக் கொண்டு சாலையில் அங்கும் இங்கும் ஓடிய இளைஞர்!!
கழுத்தை அறுத்துக் கொண்டு சாலையில் அங்கும் இங்கும் ஓடிய இளைஞர்!!
கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியில் இளைஞர் ஒருவர் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு அலறியபடி அங்கும் இங்கும் ஓடிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதங்கோடு பகுதியை சேர்ந்த அஜித் (30) சென்னையில் இட்லி மாவு கடை நடத்தி வருகிறார். கடந்த 31ஆம் தேதி ஊருக்கு வந்த அஜித் அன்று முதலே கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், எல்லாரிடமும் கடுமையாக நடந்து கொண்டதோடு அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு குழித்துறை நகராட்சி அலுவலகம் எதிரே வந்த அவர், கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டு அலறியவாறு அங்கும் இங்கும் ஓடியுள்ளார்.
மேலும் குழித்துறை அரசு மருத்துவமனைக்குள் சென்று வலியில் அலறியுள்ளார். இது குறித்து மருத்துவமனை ஊழியர்கள் மார்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று அவரிடம் இருந்த கத்தியை கைபற்றி முதல் உதவி அளித்தனர்.
பின்னர் உயிருக்குப்போராடிய அஜித்தை ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தன்னை சென்னையில் இருவர் தாக்கிவிட்டதாகவும், ஊரில் இருவர் தாக்கி விட்டதாகவும் பேசிகொண்டே இருந்தார்.
இந்நிலையில் அவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் தற்கொலை செய்ய முயற்சித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
newstm.in