போதை ஊசி ஏற்றிய இளைஞர்.. துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம் !!
போதை ஊசி ஏற்றிய இளைஞர்.. துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம் !!
தலைக்கேறிய போதையால் இளைஞர் ஒருவர் உடல்நலம் பாதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியான பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர். மது அருந்தும் பழக்கம் மட்டும் இல்லாமல் கஞ்சா, ஊசி மூலம் போதைபொருளை உடலில் ஏற்றியும் ராஜ்குமார் வந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் நரம்பில் போதை ஊசி செலுத்தியுள்ளார். இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வீட்டில் வலியால் துடித்த அவரை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஃபரித்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, ராஜ்குமாருக்குப் போதைப் பொருட்களை சப்ளை செய்தது யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்திய போலீசார், அந்த வகையில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் லூதியான பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறான நரம்பில் போதை ஊசி செலுத்தியதால் ராஜ்குமார் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
newstm.in