வீட்டை துளைத்த ஏவுகணைக்கு அருகில் நின்று ஹாயாக ‘ஷேவ்’ செய்த இளைஞர்!!
வீட்டை துளைத்த ஏவுகணைக்கு அருகில் நின்று ஹாயாக ‘ஷேவ்’ செய்த இளைஞர்!!
ரஷ்யாவின் ஏவுகணை துளைத்து நின்ற போதிலும், அதற்கு அருகிலேயே இளைஞர் ஒருவர் ஜாலியாக ஷேவ் செய்யும் ஃபோட்டோ இணையத்தை கலக்கி வருகிறது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 120 நாட்களையும் கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் தொடர் தாக்குதலில் உக்ரைன் உருக்குலைந்து போயிருந்தாலும் அந்த நாட்டு மக்களுக்கே உரித்தான துணிச்சல் இன்னும் சிதைந்து போகவில்லை.
ரஷ்யப் படையினருக்கு எதிராக கைகளில் ஆயுதங்களுடன் வீதிகளில் இறங்கி உக்ரைன் மக்கள் போரிட்டு வருகின்றனர். இந்தப் போரில் பல இளம்பெண்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ உக்ரைனில் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்நகரில் உள்ள ஒரு வீட்டை, ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று துளைத்தது.
யாராக இருந்தாலும் வீட்டை காலி செய்திருப்பார்கள். ஆனால், அந்த வீட்டின் உரிமையாளரான 35 வயது இளைஞர், மறுதினம் காலையில் அந்த ஏவுகணைக்கு பக்கத்தில் நின்றபடியே அசால்ட்டாக தனது தாடியை 'ஷேவ்' செய்து கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டீசன்கள், கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீதும், அதன் ஆயுதங்கள் மீதும் இருந்த மரியாதை சுத்தமாக போய்விட்டது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
newstm.in