திருமணத்திற்கு விருந்தினராக வந்த பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்!! VIDEO
திருமணத்திற்கு விருந்தினராக வந்த பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்!! VIDEO
திருமண நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் பின்பக்கமாக நின்று முகூர்த்த நேரத்தில் தாலி கட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் வருவது போன்ற காட்சி நிஜத்திலும் நடந்திருக்கிறது. காரணம் தற்போது இருக்கும் 2K கிட்ஸ்களின் முதிர்ச்சியில்லா குணம்தான். இன்ஸ்டாகிராம் தான் வாழ்க்கை என்று இருக்கின்றனர் அவர்கள்.
அதனால் ஏதாவது கவனம் ஈர்க்கும் வகையில் செய்ய வேண்டும் என்பது 2K கிட்ஸ்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் திருமண நிகழ்வு ஒன்றில் நடந்துள்ளது.
சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இளைஞர் ஒருவர் திருமணத்திற்கு வந்திருந்த பெண் ஒருவருக்கு பின்னால் இருந்து தாலி கட்டுகிறார். திருமணத்திற்கு கெட்டி மேளம் அடிக்க, அதைப்பயன்படுத்திக் கொண்டு இவர் தாலி கட்டி விட்டார்.
Jail confirmed. 😁😳😳😳@aselvarajTOI#InShot pic.twitter.com/rcdnxZVqOz
— Selvaraj Arunachalam (@selvarajtoi) February 20, 2022
இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இளைஞர் தாலி கட்டிய போது அந்தப் பெண்ணுக்கு தெரிந்திருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவர் தெரிந்து கொண்டே 2K கிட் மன நிலையில் இருந்தாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
newstm.in