மாமியார் தலையில் பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர் !!

மாமியார் தலையில் பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர் !!

Update: 2022-06-25 20:46 GMT

சென்னை காசிமேடு பகுதியில் உள்ள ஜி.எம்.பேட்டை அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பரிமளா (45). இவரது மகளை அதே பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (எ) ஈறுபேன் மதன் (26) என்ற இளைஞருக்கு திமுணம் செய்துக்கொடுத்தார். பரிமளாவின் வீட்டில் இருவரும் வசித்து வருகின்றனர். ஆனால் திருமணம் முடிந்தபிறகும் மதன்குமார் அடிக்கடி மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். 

அதோடு மதுபோதையில் தனது மனைவியிடம் தகராறு செய்தும் வந்துள்ளார். அதேபோல், நேற்றிரவும் குடிபோதையில் வீடு திரும்பிய மதன்குமார் மனைவியுடன் வாய்த்தகராறில் ஈடுபட்டு பின்னர் அவரை சரமாரி அடித்துள்ளார். இதை தடுக்க வந்த மாமியார் பரிமளாவை பீர்பாட்டிலால் மதன்குமார் சரமாரி தாக்கியுள்ளார்.

இதில் பரிமளாவுக்கு கன்னம், வலது கண்புருவம் மற்றும் முதுகு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. பீர் பாட்டிலால் மாமியாரை தாக்கிவிட்டு அங்கிருந்து மதன்குமார் தப்பியோடினார். பின்னர் இப்புகாரின்பேரில் காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த மதன்குமாரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

newstm.in

Similar News