மலை இடுக்கில் 41 மணி நேரமாக சிக்கித்தவிக்கும் இளைஞர்!!

மலை இடுக்கில் 41 மணி நேரமாக சிக்கித்தவிக்கும் இளைஞர்!!

Update: 2022-02-09 10:09 GMT

கேரள மாநிலம் பாலக்காடு மழப்புழா மலையில் டிரெக்கிங் செல்லும் போது மாணவர் ஒருவர் மலைமுகட்டில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேராட் கிராமத்தை சேர்ந்த பாபு (23)  என்ற இளைஞர்  குறம்பாச்சி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்துள்ளார். 2 நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் அவர் அங்கு மலையேற்றம் செய்து இருக்கிறார்.

மலையில் ஏறிவிட்டு இறங்கும் போது பாபு தவறி கீழே விழுந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக மலைக்கு கீழே விழாமல் முகடு ஒன்றில் குதித்து தப்பித்து உள்ளார். அதாவது மலைக்கு நடுவே குகை போல இருக்கும்.

ஆள் செல்ல முடியாத இந்த இடத்தில் பாபு தவறி கீழே விழுந்துள்ளார். பிப்ரவரி 7ஆம் தேதி உள்ளே விழுந்தவர் கடந்த 41 மணி நேரமாக அந்த மலை யுகத்தில் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கிறார். முதலில் அவரை மீட்க அவரின் நண்பர்கள் முயன்று உள்ளனர்.

பிப்ரவரி 7ஆம் தேதி இரவு 12 மணிக்கு தீயணைப்பு படையினர் அங்கு வந்து கேம்ப் அமைத்தனர். அவரை மீட்கும் பணி இரவில் இருள் காரணமாக செய்யப்படவில்லை. மறுநாள் தொடங்கப்பட்ட மீட்பு பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Full View

தீயணைப்புப்படை, ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தோல்வி அடைந்ததால், உதகை வெலிங்டன் மற்றும் பெங்களூருவில் இருந்து வந்த மலையேற்றம் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் தற்போது மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

Similar News