துல்கர் சல்மான் படங்களை புறக்கணிக்கும் தியேட்டர்கள்! காரணம் என்ன?

துல்கர் சல்மான் படங்களை புறக்கணிக்கும் தியேட்டர்கள்! காரணம் என்ன?

Update: 2022-03-17 08:33 GMT

துல்கர் சல்மானின் படங்களை புறக்கணிக்க கேரள திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஓடிடி காரணமாக தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழில் நடிகர் சூர்யா தனது படங்களை ஓடிடியில் வெளியிட்டு வந்தார். அப்போது அவர் படங்களை திரையரங்குகளில் வெளியிட போவதில்லை என்ற தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர்.

ந்நிலையில் துல்கர் சல்மானின் படங்களை புறக்கணிக்க இருப்பதாக கேரள திரையரங்க உரிமையாளர் சங்கம்,  விநியோகஸ்தர்கள் சங்கம் இணைந்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.

துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள 'சல்யூட்' படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா  மூன்றாவது அலை உருவானதும் படத்தை ஓடிடியில் வெளியிட துல்கர் சல்மான் முடிவு செய்தார். தியேட்டர் உரிமையாளர்கள் உடன் போடப்பட்ட ஒப்பந்தம் அப்படியே இருக்கிறது.

தியேட்டர் உரிமையாளர்களுக்கு எதுவும் தெரிவிக்காமல் சல்யூட் படத்தை ஓடிடியில் வெளியிட துல்கர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சல்யூட் திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் மார்ச் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.

newstm.in

Similar News