ஹெச்.ராஜா வீட்டில் திருட்டு! இருவர் கைது!!

ஹெச்.ராஜா வீட்டில் திருட்டு! இருவர் கைது!!

Update: 2022-02-22 07:46 GMT

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் ஒன்பதாவது விதியில் எச்.ராஜாவுக்கு சொந்தமான வீடு இருந்தது, பழைய வீடு என்பதால் அதை இடித்துவிட்டு அதில் உள்ள இரும்பு பொருட்களை அருகில் உள்ள இடத்தில் வைத்திருந்தனர்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் காலியிடத்தில் கிடந்த இரும்பு கதவுகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜாவின் மருமகன் சூர்யா கொடுத்த புகாரின் பேரில், காரைக்குடி வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காரைக்குடி கற்பக விநாயநகர் பகுதியைச் சேர்ந்த சோமு, வைரம் பகுதியைச் சேர்ந்த ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து திருடிய இரும்பு பொருள்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

newstm.in

Similar News