அப்போ சைக்கிள்.. இப்போ கார்.. மாஸாக வந்து வாக்களித்த விஜய் !!

அப்போ சைக்கிள்.. இப்போ கார்.. மாஸாக வந்து வாக்களித்த விஜய் !!

Update: 2022-02-19 07:56 GMT

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து, நடிகர் விஜய் சிவப்பு நிற காரில் வந்து வாக்களித்தார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துநின்று வாக்களித்து வருகின்றனர்.

அதேவேளையில், சினிமா  பிரபலங்களும் ஓட்டு போட வந்துள்ளனர். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து நடிகர் , கருப்பு கலர் மாஸ்க் உடன் சிவப்பு நிற காரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் விஜய் வருவதை அறிந்து அவரது ரசிகர்கள் அங்கு அதிகளவில் கூடியிருந்தனர். ரசிகர்கள் படைசூள காரில் வந்து வாக்குப்பதிவு மையத்தில் இறங்கினார் விஜய்.

அங்கும் கூட்டம் கூடியது. எனினும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை சரிசெய்தனர். இதனையடுத்து நடிகர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்து அங்கிருந்து தனது காரில் புறப்பட்டுச் சென்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது நடிகர் விஜய் சைக்கிவிஜய்ளில் வாக்களிக்க வந்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

newstm.in

Similar News