காவல் துறையில் இருக்கு 444 காலி பணியிடம்.. விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி நாள்..!

காவல் துறையில் இருக்கு 444 காலி பணியிடம்.. விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி நாள்..!

Update: 2022-03-10 07:45 GMT

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கையர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான விண்ணப்பங்கள் www.tnusrb.gov.in என்ற இணையதளம்  வாயிலாக வரவேற்கப்படுகின்றன. வயது ,கல்வித்தகுதி மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பதிவுக்கு ஏப்ரல் 7-ம் தேதி கடைசி நாளாகும். தகுதியான நபர்களுக்கு எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு , உடற்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடக்க உள்ளன.

முதன் முறையாக 100 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழி தகுதி தேர்வு நடக்க இருக்கிறது. இதில் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். எழுத்து தேர்வுக்கான தேதி ஜூனில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்களுக்கு உதவி செய்ய சென்னை எழும்பூரில் உள்ள சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகங்களில் ஏப்ரல் 7-ம் தேதி வரை உதவி மையங்கள் செயல்படும்.

மேலும் விவரங்கள் அறிய 044 - 4001 6200; 044 - 2841 3658 மற்றும் 94990 08445; 91762 43899 என்ற எண்களில் விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளலாம் என வாரியம் அறிவித்துள்ளது.

Similar News