புதுச்சேரியில் இயங்கி வரும் ஜிப்மரில் இந்தி தினிப்பு இல்லை - ஆளுநர் தமிழிசை விளக்கம்..!!

புதுச்சேரியில் இயங்கி வரும் ஜிப்மரில் இந்தி தினிப்பு இல்லை - ஆளுநர் தமிழிசை விளக்கம்..!!

Update: 2022-05-10 04:50 GMT

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இனி வரும் காலங்களில் அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை புதுச்சேரி ஜிம்பர் இயக்குநர் பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக இந்தியை கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த உத்தரவை திரும்ப வலியுறுத்தியும் புதுச்சேரி திமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

அர்பாட்டத்தில், புதுச்சேரி திமுக அமைப்பாளுரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.சிவா தலைமையில் முற்றுகை போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார், சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை நேரடியாக புதுவை ஜிப்மருக்கு வந்தார். அங்கு நிர்வாக பிரிவு அலுவலகத்தில் உள்ள இயக்குநர் ராகேஷ் அகர்வால் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு இயக்குநர் ராகேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில அவர் கூறியதாவது, “தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழ் எந்தவிதத்திலும் வேறுபடாமல், தடைபடாமல் இருப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மருத்துவமனையில் இருப்பதால், உள்நிர்வாக ரீதியான பணிக்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் இந்தி இடம் பெற்றுள்ளது. இது இந்தி திணிப்பு என்று தவறாக வெளியில் பரவியுள்ளது.

மேலும், ஜிப்மரில் எல்லா பெயர் பலகைகளிலும் முதல் பகுதியாக தமிழ் இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு கொடுக்கப்படவேண்டிய அத்தனை அறிக்கைகளிலும் தமிழ் இருக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை தான் நான் பிரதானமாக எடுத்துக் கொள்கிறேன்.

எனவே, ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை. இதனை அரசியல் ஆக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

Similar News