பிரியாணியில் ‘பீஸ்’ இல்லை! கடை சூறை, கேஷியருக்கு பளார்!!

பிரியாணியில் ‘பீஸ்’ இல்லை! கடை சூறை, கேஷியருக்கு பளார்!!

Update: 2022-03-07 20:09 GMT

பிரியாணியில் கறி இல்லை என கூறி கடையின் கேஷியரை தாக்கிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பெரியமேடு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபலமான பிரியாணி கடையில், திருவள்ளூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கேஷியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ரபீக், சலீம், சண்முகம் ஆகிய மூன்று பேர் பார்சலில் பிரியாணி வாங்க கடைக்கு வந்துள்ளனர்.  அப்போது பார்சல் பிரியாணியில் கறி குறைவாக இருப்பதாக கூறி தகராறு செய்துள்ளனர்.

மேலும் கடையில் இருந்த விக்னேஷ் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் மூன்று பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இது குறித்து விக்னேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ரபீகை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சலீம் மற்றும் சண்முகத்தை தேடி வருகின்றனர்.

newstm.in

Similar News