காதலுக்கு எல்லையில்லை : இந்திய காதலனைக் கரம்பிடிக்க நீந்தி வந்த வங்கதேசத்து பெண்!!

காதலுக்கு எல்லையில்லை : இந்திய காதலனைக் கரம்பிடிக்க நீந்தி வந்த வங்கதேசத்து பெண்!!

Update: 2022-06-02 04:15 GMT

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அபிக் மந்தலும், வங்கதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கிருஷ்ணா மந்தலும் பேஸ்புக் மூலம் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர்.  பின்னர் இது காதலாக மாறிய நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர்.

ஆனால் கிருஷ்ணா மந்தலிடம் பாஸ்போர்ட் இல்லை. இதனால் இந்தியா வரமுடியாத சூழல் நிலவிய போதும், காதலித்த நபரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்கான இந்தியா வர முடிவெடுத்துள்ளார். இதற்கான ஆபத்தான விலங்குகள் வசிக்கும் சுந்தரவனக்காட்டை முதலில் வந்தடைந்தார். அங்கிருந்த நதியில் ஒரு மணிநேரம் நீந்தி தொடர்ந்து தனது இலக்கை அடைந்தார்.

இறுதியில் இந்தியாவை வந்தடைந்த கிருஷ்ணா மந்தல்,கொல்கத்தாவில் உள்ள காளிகட் கோவிலில் காதலன் அபிக் மந்தலை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சட்டவிரோதமாக இந்தியா நாட்டிற்குள் நுழைந்ததாக கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.இதனையடுத்து தற்போது பங்களாதேஷ் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சிறுவன் ஒருவன் தனக்கு விருப்பமான சாக்லேட் வாங்குவதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News