பெட்ரோல் போட்டு மிச்சம் இல்லை.. வேலைக்கு செல்ல சொந்தமாக குதிரை வாங்கிய நபர் !!

பெட்ரோல் போட்டு மிச்சம் இல்லை.. வேலைக்கு செல்ல சொந்தமாக குதிரை வாங்கிய நபர் !!

Update: 2022-03-16 18:45 GMT

இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல்- டீசல் விலை உயரவில்லை. எனினும் ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாயை தாண்டியுள்ளது. இந்த நிலையில், இதற்கெல்லாம் சேர்த்து விரைவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 5 மாநில தேர்தல் நடைபெற்று முடிந்ததால் எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல் விலை உயரக்கூடும் என்ற அச்சத்திலேயே மக்கள் உள்ளனர்.

இந்த தேர்தலுக்கு முன்பாக நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வைச் சமாளிக்க முடியவில்லை என கூறி மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் சொந்தமாக குதிரை வாங்கி தினமும் வேலைக்குச் சென்று வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த ஷேக் யூசப் ஜிகர், என்பவர் கல்லூரி ஒன்றில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். வீட்டிலிருந்து கல்லூரிக்குத் தினமும் 15 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அவரால் விலையை உயர்வைச் சமாளிக்க முடியவில்லை. இதனால் ரூ. 40 ஆயிரத்திற்கு குதிரை ஒன்றை வாங்கி தினமும் அதில் கல்லூரிக்குச் சென்று வருகிறார்.

இவர், குதிரையில் வேலைக்குச் சென்றுவரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவரது இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இனி குதிரை பயணம் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


newstm.in

Tags:    

Similar News